Home Accident News ரயிலுடன் லொறி மோதி பாரிய விபத்து ; மேலும் ஐந்து வாகனங்களுக்கு சேதம்

ரயிலுடன் லொறி மோதி பாரிய விபத்து ; மேலும் ஐந்து வாகனங்களுக்கு சேதம்

கனேமுல்ல புகையிரத கடவையில் டிப்பர் வாகனமும் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதுடன் மேலும் ஐந்து வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கனேமுல்ல போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி குறித்த புகையிரதம் பயணிக்கவிருந்த நிலையில், கடவத்தை திசையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் தண்டவாளத்துக்கும் கடவைக்கும் இடையில் சிக்கிக்கொணடுள்ளது.

இதன்போது குறித்த டிப்பர் வாகனம் புகையிரதத்தில் மோதுண்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த நான்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்துவதற்கு முயற்சித்த போதும் தடை இயங்காததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக அதன் சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகினர்.

கனேமுல்ல புகையிரத கடவையில், ரயிலுடன் லொறி மோதி பாரிய விபத்து ; மேலும் ஐந்து வாகனங்களுக்கு சேதம், Jaffna News கனேமுல்ல புகையிரத கடவையில், ரயிலுடன் லொறி மோதி பாரிய விபத்து ; மேலும் ஐந்து வாகனங்களுக்கு சேதம், Jaffna News கனேமுல்ல புகையிரத கடவையில், ரயிலுடன் லொறி மோதி பாரிய விபத்து ; மேலும் ஐந்து வாகனங்களுக்கு சேதம், Jaffna News

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நடுவீதியில் வைத்து வயோதிப தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்
Previous articleதும்புத்தடியால் தாக்கிய இளைஞன்! ரிஷாட் வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம்
Next articleகுழந்தையை வைத்திருந்தால் திருமணம் நடக்காதாம்; பிரசவித்த சிசுவை சகோதரியிடம் ஒப்படைத்த பெண்: யாழில் சம்பவம்!