Home Ampara news முச்சக்கரவண்டியில் கஞ்சா!! கடத்தி சென்றவர் மாட்டினார்

முச்சக்கரவண்டியில் கஞ்சா!! கடத்தி சென்றவர் மாட்டினார்

கேரளா கஞ்சா வினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று(19) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளா கஞ்சா, முச்சக்கரவண்டியில் கஞ்சா!! கடத்தி சென்றவர் மாட்டினார், Jaffna News

முச்சக்கரவண்டி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காரைதீவு சந்திக்கு அருகில் சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடாத்தி சுமார் 43 வயதுடைய கல்முனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை 1 கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் உட்பட அவர் பயணம் செய்த முச்சக்கரவண்டி சான்று பொருட்கள் சகிதம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
Previous articleகொத்தலாவல கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழப்பு
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 20.07.2021