Home jaffna news மேதகு திரைப்படத்தை தரவிறக்கி, திருட்டு VCD போட்டு வித்த 02 பேர் கைது

மேதகு திரைப்படத்தை தரவிறக்கி, திருட்டு VCD போட்டு வித்த 02 பேர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து , திருட்டு VCD போட்டு விற்பனை செய்தனர்

என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மேதகு

நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடையொன்றை நடத்தி வரும் நபரொருவரும் அவரது கூட்டாளியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள, பிரதான சந்தேக நபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு,

பென் டிரைவ்களில் படம் பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும், ஹவா எலிய பகுதியில் வசிப்பவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருக்கோவில் சதோச விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா !
Previous articleயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
Next article13 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் ‘கிம்புலா எலே குணா’ வின் சகோதரர் மற்றும் மனைவி கைது