Home Local news இணையத்தில் கற்பிப்பதாக கூறி மாணவிகளிடம் அந்தரங்கப்படம் கேட்ட ஆசாமி கைது

இணையத்தில் கற்பிப்பதாக கூறி மாணவிகளிடம் அந்தரங்கப்படம் கேட்ட ஆசாமி கைது

more news

தன்னை ஆசிரியராக காண்பித்துக் கொண்டு மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை கோரிய ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கங்கீம பகுதியில் உள்ள பொரலுஹேனவில் வசிக்கும் 29 வயதுடையவரே கைதாகினார்.

மாணவிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆசாமி, தன்னை ஆசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாணவிகளிற்கு சுகாதாரம் பாடம் கற்பிக்கும் போர்வையில், மாணவிகளின் பிறப்புறுப்பு தொடர்பில் விசாரித்துள்ளார். அத்துடன், சுகாதார கல்வியென்ற போர்வையில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார்.

அந்த நபர் மீது 6 பாடசாலை மாணவிகள் முறைப்பாடளித்தனர். பிடிகல பொலிசாரிடம் 4 மாணவிகளும் கரந்தெனிய பொலிசாரிடம் 2 மாணவிகளும் முறைப்பாடளித்துள்ளனர்.

மாணவிகளை நேரில் சந்திக்கும்படியும் அழைத்துள்ளார். தனது பெற்றோருடன் மாணவியொருவர் நேரில் சென்றதையடுத்து, அவர் கைதானார்.

அவர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார்.

இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நிந்தவூரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம்
Previous articleபெண் வைத்தியர் ஆடை மாற்றியதை புகைப்படமெடுத்த ஆண் வைத்தியர் கைது
Next article15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: பொலிஸ் அதிகாரி, வங்கி முகாமையாளர் கைது! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வலை