Home Local news கொழும்பில் ஆர்ப்பாட்டம் ! 16 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ! 16 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில்

more news

நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 16 பேர் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 16 பேர் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் பௌத்த துறவி உள்ளிட்டவர்கள் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கைதிற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

v

போராட்டக்காரர்கள் மீதான நியாயமற்ற அத்துமீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில்

மக்களினதும் மக்கள் செயற்பாட்டாளர்களினதும் செயற்பாடுகளை நியாயபூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி அவர்களையும், அரசாங்கத்தினையும் வேண்டி நிற்கின்றோம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கண்டனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கைதினை கண்டித்து ஆசிரியர்கள் இணைவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொள்ளாமல்,

தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தின் போது

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆசிரியர் சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரை, எதிர்வரும் திங்கட் கிழமைமுதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE >>>  இராணுவ பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்த நிகழ்வு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமுல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து ! அரச உத்தியேகத்தர் உயிரிழப்பு !
Next articleஇன்றைய ராசிபலன் – 10/07/2021