Home Accident News சிறைக் கைதிகளை ஏற்றி சென்ற பஸ் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலே பலி

சிறைக் கைதிகளை ஏற்றி சென்ற பஸ் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலே பலி

more news

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இருபஸ்வண்டிகள் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலநறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இரு சிறைக் கைதிகளை ஏற்றிக்கொண்டு இரு பஸ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சம்பவதினமான நேற்று மாலை 4 மணியளவில் பிரயாணித்தபோது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சந்தி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வீதியில் பிரயாணித்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளளார்.

அதில் சிறைச்சாலை பஸ்வண்டிசாரதி ஒருவரை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கடலில் நீராடச்சென்ற அரச உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleஉங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் உண்டா? அப்படியானால் இது உங்களுக்காக
Next articleமாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – பொலிஸார் உள்ளிட்ட 64 பேர் தனிமைப்படுத்தலில்