Home Local news ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த 17 பேர் கைது

ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த 17 பேர் கைது

more news

ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிறுமியின் தாய், விற்ற நபர், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் ஓட்டுநர்கள்,

ஒவ்வொரு இடத்திற்கும் சிறுமியை அழைத்துச் சென்றவர் மற்றும் சிறுமியை விற்ற விளம்பரத்தை பதிவிட்டவர்கள் மற்றும்

இவர்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ்மா அதிபரும் சட்டத்தரணி , பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கல்கிசையை சேர்ந்த ஒருவர் குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த சிறுமி சுமார் மூன்று மாதங்களுக்கு தலா 10,000 ரூபாய், 15,000 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 20 பேரின் விவரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  கோவிட் சடலங்களை பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு!

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகழிவு குழிக்குள் வீழ்ந்து ஆண் குழந்தை பலி! மஸ்கெலியாவில் சோகம்
Next articleபாடசாலை அதிபர் அரங்கேற்றிய காமலீலை