Home Astology இன்றைய ராசிபலன்- 28/06/2020, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

இன்றைய ராசிபலன்- 28/06/2020, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

more news

28-06-2021, ஆனி 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.16 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிபலன் – 28.06.2021

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

READ MORE >>>  தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

READ MORE >>>  வரும் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

கும்பம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகைதிகளின் விடுதலை தொடர்பில் மகஜர்
Next articleமுக கவசம் இன்றி பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்! வேடிக்கை பார்த்த பொலிசார்