Home Astology இன்றைய ராசிபலன் – 25/06/2021, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.

இன்றைய ராசிபலன் – 25/06/2021, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.

more news

25-06-2021, ஆனி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.59 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 06.40 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிபலன் – 25.06.2021

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 30.09.2021

கடகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 16/07/2021

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஅரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்
Next articleகுளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு