Home Tamil News பள்ளிவாசல் உண்டியல்களை உடைத்து திருடிய சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

பள்ளிவாசல் உண்டியல்களை உடைத்து திருடிய சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

more news

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச ஜும்ஆப் பள்ளிவாசல் உண்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய இருபது வயதுடைய இளம் சந்தேக நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் வழங்கிய மிகத்துல்லியமான தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸாரின் உதவியுடன் நேற்று (18) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 2,250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்

என்றும் ஏறாவூரில் திருமணம் முடித்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, பள்ளிவாசல்கள் உண்டியலை உடைத்துத் திருடியமை தொடர்பிலும், போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பிலும் வாழைச்சேனைப் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரதேசத்தில் கோவிட் பரவல் காரணமாக பயணத்தடை அமுலிலுள்ள சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி

இவ்வாறான திருட்டு மற்றும் போதைப்பாவனை, விற்பனை மிகத்தீவிரமாகத் தலை தூக்கியுள்ளதுடன், இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் தொடர்பில் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!
Previous articleமட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின் கடல் ஆமைகள்,
Next articleபருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதி