Home Local news முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல்

முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது தாக்குதல்

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம் மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.

இதன்போது முககவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட வரை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருகோணமலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி