Home Accident News தனிமைப்படுத்தலுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து

தனிமைப்படுத்தலுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து

more news

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பயணிகளை தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து வவுனியா, ஓமந்தை, பனிக்கநீராவி பகுதியில் சென்ற போது இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சொகுசு பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி, பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது, ஏ9 வீதியில் ஓமந்தை, பனிக்கநீராவிப் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சொகுசு பேருந்து சொகுசு பேருந்து சொகுசு பேருந்து

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இலங்கை அஞ்சல் திணைக்களம், மக்களுக்கு பல்வேறு சேவைகளை காலடிக்கு சென்று வழங்கி வருகின்றது
Previous articleசம்மாந்துறை பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்பு தயாரித்தவர் சிக்கினார் : பொருட்களும் பொலிஸார் வசமானது !
Next articleபாலியல் சர்ச்சையில் சிக்கிய தமிழ் பிரதேச செயலாளர்! நீதிக்கு போராடும் பெண்