Home Indian news காதலியோடு சுற்றிய கணவன் -பதிலுக்கு காதலனோடு சுற்றிய மனைவி -அடுத்து வீட்டில் நடந்த விபரீதம் .

காதலியோடு சுற்றிய கணவன் -பதிலுக்கு காதலனோடு சுற்றிய மனைவி -அடுத்து வீட்டில் நடந்த விபரீதம் .

கள்ள காதல் தகராறில் கணவனை கொன்ற ஒரு மனைவியை போலீசார் கைது செய்தனர் .

டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் பிங்கி என்ற 31 வயதான பெண், தனது 35 வயதான கணவர் அனில் சாஹுவுடன் வசித்து வந்தார் .அவர் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் சாஹுவுக்கு அவரின் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு கள்ள உறவு இருந்ததாக அந்த பெண் சந்தேகப்பட்டார் ,

அதனால் இருவருக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை வந்தது .ஆனால் அந்த கணவர் அந்த பெண்ணோடு இருக்கும் கள்ள உறவினை கை விடவில்லை .

அதனால் அந்த பிங்கி தானும் ராஜு என்பவரோடு கள்ள உறவினை ஏற்படுத்தி கொண்டார் .இது அந்த பெண்ணின் கணவர் சாஹுவுக்கு தெரிய வந்தது .அதனால் அவர் மனைவியோடு சண்டை போட்டார் .

அதனால் அந்த பெண் தன்னுடைய காதலன் ராஜுவோடு சேர்ந்து அந்த கணவரை கொல்ல முடிவெடுத்தார் .அதன் படி ஜூன் 3ம் தேதியன்று இரவு அவரின் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்தார் .

அதன் பிறகு அவர் தூங்கும்போது அவரின் காதலன் ராஜுவுடன் சேர்ந்து அவரை கொன்று விட்டார் .பின்னர் மறுநாள் போலீசில் அந்த கணவரை யாரோ இரண்டு பேர் வீட்டிற்குள் நுழைந்து கொன்று விட்டதாக நாடகம் ஆடினார் .

ஆனால் போலீஸ் அந்த மனைவியை பிடித்து விசாரித்த போது ,அவர் காதலனோடு சேர்ந்து கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார் .பின்னர் போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண் பிங்கியை கைது செய்தனர் .பிறகு தப்பியோடிய அவரின் காதலன் ராஜூவை தேடி வருகின்றனர் .

READ MORE >>>  14 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 25 வயது அண்ணன் கைது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleதாயை கத்தியால் குத்தியதால் ஆத்திரம்… தந்தையை அடித்துக்கொன்ற மகன்கள்!
Next articleபயணத் தடை அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் எடுத்துச் சென்றவர் ஒருவர் கைது!