Home cinema news மாஸ்க் எப்படி அணியக் கூடாது… திரைப் பிரபலங்களின் வேடிக்கையான பதிவு!

மாஸ்க் எப்படி அணியக் கூடாது… திரைப் பிரபலங்களின் வேடிக்கையான பதிவு!

தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்துள்ளதால் சில மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது நடிகை வரலட்சுமி மாஸ்க் எப்படி ஒழுங்காக அணிய வேண்டும் என்பது குறித்து பல நடிகர்கள் பங்கு பெறச் செய்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ்க் எப்படி அணியக் கூடாது… திரைப் பிரபலங்களின் வேடிக்கையான பதிவு!
“நான் கேட்டவுடன் அதைச் செய்த அனைவருக்கும் நன்றி .. !! உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் .. !!

எங்களிடமிருந்து உங்களுக்கு சிறிது வேடிக்கை .. மாஸ்க் அணிவது எப்படி.” என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ரெஜினா கசாண்ட்ரா, வித்யு ராமன், சுந்தீப் கிஷன், கிருஷ்ணா, சதீஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  காதலித்து ஏமாற்றி பிரபல நடிகர்! 10 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை…