Home Lifestyle ஒரு ஏழை மாணவியின் உள்ளத்து குமுறல்

ஒரு ஏழை மாணவியின் உள்ளத்து குமுறல்

யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, ஒரு ஏழை மாணவியின் உள்ளத்து குமுறல் ..

சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,

பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.

ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.

நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.

சம்பலுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.

அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.

நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.

எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.

ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.

வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.

READ MORE >>>  'இலவச உள்ளாடை திட்டம்' என 18 வயது இளம் பெண்ணிடம் ஆசாமி செய்த செயல்!. அதன் பின் நடந்த சம்பவத்தின் முழு பின்னணி!!

ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.

இப்படிக்கு
ஏழை மாணவி.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.