Home jaffna news கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

more news

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய மிக சிறந்த அன்புக்குரிய விரிவுரையாளராக பணியாற்றியவர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

“நிறை குடம் தழும்பாது”
என்ற பழமொழிக்கு நான் கண்ட முதல் உதாரணம் திருமதி. ஆனந்தகுமாரசுவாமி அம்மா அவர்கள் தான்.

நிமிர்ந்த நடையும் கணீரென்ற குரலும் சிரித்த முகமும் அவரை மென்மேலும் அழகுறச் செய்பவை.

வேம்படி அன்னையின் அன்பான விசுவாசி.
ஆம் நன்றாக நினைவில் இருக்கிறது 2014 ஆம் ஆண்டு தமிழ்த்தின விழா. நன்றி உரையில் திருமதி என்ற மதிப்புச்சொல்லை அம்மையாருக்கு கூறத்தவறி விட்டேன்.

மற்றவர் போல் பத்துப் பேர் மத்தியில் அவமானம் செய்யாது , வீட்டிற்கு போகும் போது “தரணிகா” என்று அழைத்தார்…
நான் பயந்த வண்ணம் அருகில் சென்றேன்.

முதுகில் தட்டி சிரித்தபடி “எதையோ miss பண்ணிற்றீங்க போல , மேடைப்பதற்றம் தான். போக போக எல்லாம் சரி வந்திடும்” என்றார். எவ்வளவு அடக்கம் என வியந்து கொண்டேன்.

பல்கலைக்கழகத்தினுள் எப்பொழுதும் வேகமாகத்தான் செல்வார். ஆனாலும் அருகில் வந்து முதுகில் தட்டி கதை கேட்காமல் செல்வதில்லை…

இப்படி எத்தனையோ மாணவர்களை உயர்த்தியவர் இன்று இறையடி சேர்ந்துவிட்டார் என்பதை உள்ளம் ஏற்க மறுக்கிறது.

சிறந்தவர்களை ஈசன் விரைவாக தன்னகத்தே ஈர்ப்பதற்கான காரணம் தான் தெரியவில்லை!!!

READ MORE >>>  கொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleசம்மாந்துறை கல்லரிச்சல் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுப்பு !
Next articleகோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கட்டி வைத்து, மிளக்காய் தூள் தூவி சித்திரவதை