Home jaffna news நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

more news

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இன்று காலை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்று மாலை 6 மணி முதல் அரசடிப் பகுதியைத் தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட டிடி!
Previous articleவீட்டில் இறந்தவரிற்கு கொரோனா
Next articleதண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி