Home jaffna news யாழில் கணவன் உயிர்மாய்த்த தகவலறிந்து மனைவியும் உயிர் துறப்பு

யாழில் கணவன் உயிர்மாய்த்த தகவலறிந்து மனைவியும் உயிர் துறப்பு

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர்.

குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார். அதனால் அவரது உயிரும் பிரிந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத நிலையில்,அண்மையில் குழந்தை பிறந்தாகவும், பிறந்த குழந்தை 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத தந்தை நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் அதே நஞ்சை அருந்தி குழந்தையின் தாயும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்