Home Tamil News இளம் பெண் வைத்தியர், தாதியர் உட்பட 22 பேரிற்கு கொரோனா

இளம் பெண் வைத்தியர், தாதியர் உட்பட 22 பேரிற்கு கொரோனா

திருகோணமலை பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் இளம் பெண் வைத்தியர் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் தாதி ஒருவரிற்கும் அவரது 5 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏனைய 22 உத்தியோகஸ்தர்களிற்கு பீசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் இளம் பெண் வைத்தியர் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலை யின் கொரோனா விடுதியில் கடந்த மாதம் மட்டும் 340 +ve நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப பராமரிப்பின் பின்னர் உரிய இடங்களிற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தற்போது 45 கொரோனா +ve நோயாளர்கள் சாதரண விடுதி போன்ற ஒன்றில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த நோயாளிகளிற்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வைத்தியசாலை நிர்வாகம் பின்னடிப்பதாகவும் உணவு விடயத்தில் கூட மிக கீழ்த்தரமாக நடப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பாக எமது செய்தியாளரின் புலன் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் இளம் பெண் வைத்தியர் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த உணவு வழங்குவதற்கு பொறுப்பான 3 சிங்காரிகள் நோயாளரிற்கு வழங்க வேண்டிய உணவுகளில் பல திருவிளையாடல் செய்து திருகோணமலை நகரில் பெரும் பணக்கார புள்ளிகளாக வலம்வரும் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இச் செயற்பாட்டிற்கு வைத்தியசாலை பணிப்பாளரின் பங்களிப்பும் உறுதுணையாக உள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

பொதுவாக வைத்தியசாலைக்குள் தொற்றிற்குள்ளாகும் உத்தியோகஸ்தர்களிற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினூடாக தனிப்பட்ட பராமரிப்பு நிலையங்கள் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தொற்றுக்குள்ளான சிங்கள தாதிகளிற்கே கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவுசெய்யும் இடங்களிற்கே சகல வசதிகளுடன் அனுப்பி வைக்கப்படுவதாகவும்

READ MORE >>>  சூட்கேஸிஸ் பெண்ணின் சடலம்!! கொலையாளி அடையாளம்

ஏனைய தமிழ் உத்தியோகஸ்தர்கள் பாதிக்கப்படும் போது யாருமே எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும் நோயாளிகளுடன் நோயாளியாகவே அனுப்பி வைக்கப்படுவதாகவும் தொற்றுக்குள்ளான வைத்தியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளான நோயாளிகளை பராமரிக்க ஓரிரண்டு தமிழ் தாதியர்களே பலமாதங்களாக முன்னின்று இரவு பகல் பாராது போராடி வருவதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான அர்ப்பணிப்புடன் தாமாக முன்வந்த சேவை செய்யும் தாதியர்களிற்கு வேலை சுமையை குறைப்பதற்கு ஆளணியை அதிகரிக்கவோ அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவோ வைத்தியசாலையின் நிர்வாகம் பின்னடித்து வருகின்றது.

எமது புலன் விசாரணையில் பல விடுதிகளில் நோயாளர்கள் ஏதுமின்றி நான்கு ஐந்து தாதியர்கள் கூடி கும்மாளம் அடிப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் எமக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக புகைப்படங்கள் மறு பதிவில் வெளியாகும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.