Home jaffna news யாழ் போதனா வைத்தியசாலையில் பவானந்தராசாவின் திருவிளையாடல்

யாழ் போதனா வைத்தியசாலையில் பவானந்தராசாவின் திருவிளையாடல்

பவானந்தராசாவின் திருவிளையாடல். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறப்பாக பணியாற்றிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு திடீர் இடமாற்றம்செய்யப்பட்டிருக்கின்றார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில வைத்திய நிபுணர்களின் தூண்டுதலாலும் தற்போதய பணிப்பாளரான பவானந்தராசாவின் திருவிளையாடல் களினாலும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தன்னிச்சையான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறப்பாக பணியாற்றிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு திடீர் இடமாற்றம்செய்யப்பட்டிருக்கின்றார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் போர்கால வடுக்களினாலும் வாள்வெட்டு, விபத்துக்கள், போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் அங்கங்கள் துண்டாடப்பட்டவர்களிற்கு

தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்களிற்காக முன்னின்று சேவை புரிந்த தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரிற்கு

கேவலம் பணவெறி பிடித்த ஒருசில நாதாரி கூட்டங்களின் எழுந்தமானமான சொல்பேச்சை கேட்டு பணிப்பாளரான பவானந்தராசா கூலிக்கு மாரடித்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைத்ததும் குறித்த வைத்திய நிபுணரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

பின்னர் அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்களை தொடர்பு கொண்ட போதே உண்மை வெளிவந்துள்ளது.

திருவிளையாடல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறப்பாக பணியாற்றிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு திடீர் இடமாற்றம்செய்யப்பட்டிருக்கின்றார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்கு அதிக நேரம் செல்வதனால் மயக்க மருந்து நிபுணர்கள், ஏனைய ஒரு சில வைத்திய நிபுணர்களிடையே முரண்பாடு காணப்பட்டு வந்துள்ளது.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் ஐ பிடிக்காத, அவரது அதீத வளர்ச்சியை பொறுக்காத வண்டி வைத்திய நிபுணர் ஒருவர் தனக்கு அனுமதிக்கப்படும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை தேவையான நோயாளிகளை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் க்கு சிபாரிசு செய்வதில்லை எனவும் தனது அனுபவம் குறைந்த வைத்தியர்களை கொண்டு பழக விடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

READ MORE >>>  கன்ரின் ஊழியர்களின் திருவிளையடல்! கண்டுக்காத பணிப்பாளர்

அண்மையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 7 வயது பெண் குழந்தை ஒன்று இவர்களின் பழகும் செயற்பாட்டினால் உயிரிழந்த துயர சம்பவங்களும் இலை மறை காயாய் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

மேலும் தனியார் வைத்தியசாலையில் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக உரிய முறையில் தொற்று நீக்கப்படாத கமரா வழி சத்திர சிகிச்சைகளும் விடிய விடிய இடம்பெறுவதாகவும் இதனால் உடனடி சத்திரசிகிச்சை நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் அங்கங்கள் துண்டாடப்பட்ட எம் சமூக மக்களிற்காக பிரதிபலனை எதிர்பாராது பல சந்தர்ப்பங்களில் உணவு உண்ண நேரம் கூட இல்லாது 15-20 மணித்தியாலங்கள் தொடர் சத்திர சிகிச்சைகளை செய்துவரும் நிலையில்,

நிரந்தர பணிப்பாளரான சத்தியமூர்த்தியால் யாழிற்கு உள்வாங்கப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் ஐயா அவர்களை சத்திய மூர்த்தி விடுமுறையில் உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடமாற்றம் வழங்கியுள்ளது.

முன்னரும் இவர் போல பல வைத்தியர்கள் பண வெறியாலும் வறட்டு திமிராலும் பழிவாங்கல் நடவடிக்கைகளிற்கு முகம்கொடுத்திருந்தமை வெளியாகியுள்ளது.

வைத்தியசாலை பணிகள் நல்லமுறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக பல கசப்பான உண்மை சம்பவங்கள் ஆதாரங்களுடன் கிடைத்தும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் விட்டிருந்தோம்.

இன்றிலிருந்து அனைவரினதும் திருவிளையாடல் கள் பாரபட்சமின்றி வெளி உலகிற்கு வெளிப்படுத்தப்படும் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.