Home Tamil News செங்கலடி தமிழ் உணர்வாளர் கணபதிப்பிள்ளை மோகன் கைது

செங்கலடி தமிழ் உணர்வாளர் கணபதிப்பிள்ளை மோகன் கைது

செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளர் தமிழ் உணர்வாளர் கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளர் தமிழ் உணர்வாளர் கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் கணினி குற்றப்பிரிவினரால் அவர், செங்கலடி யிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து tag செய்தவர்களின் பதிவுகள் என அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து - 35 பேர் காயம்!