Home Accident News திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி – ஆபத்தான நிலையில் காதலன்

திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி – ஆபத்தான நிலையில் காதலன்

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரணமடைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார்.

திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள் சிக்கியுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனா தொற்று!! இளம் மருத்துவரை இழந்தது இலங்கை