Home Tamil News ஹரோயின்னுடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு விளக்கமறியல்!

ஹரோயின்னுடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு வாழைச்சேனை யில் ஹரோயின் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை ஹரோயின் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றிய

இராணுவச் சிப்பாய் ஒருவரை சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரினை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 3 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நீர் நிரம்பிய குழியில் வழுக்கி விழுந்து தாய் மகன் உட்பட மூவர் பலி