Home jaffna news குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலையை வைத்த மேதாவிகள்

குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலையை வைத்த மேதாவிகள்

யாழ்.நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது.

அந்த சிலையை இன்று அவதானிக்க முடிந்தது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுகின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் பலி!
Previous article“இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா..?..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே..!
Next articleயாழில் கலப்பட மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது