Home வவுனியா செய்திகள் வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினர் யாழில் கைது

வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினர் யாழில் கைது

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வானில் வந்து வீடொன்றில் புகுந்து வள்வெட்டு தாக்குதல் நடத்திய குழு வினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வள்வெட்டு குழு வொன்று அங்கிருந்த பொருட்களைசேதப்படுத்தி தாக்குதல் நடத்தியிருந்தது.

vavuniya, வவுனியா, வள்வெட்டு, யாழில் ,யாழ்ப்பாணம் கைது ஆவா குழு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வெள்ளை வான், Today Jaffna Tamil Breaking News | வவுனியா , யாழில் , வாள்வெட்டு , தாக்குதல் , குறித்த , வீட்டு , vavunija news , யாழ் , யாழ்ப்பாணம்

இந்நிலையில் அக்குழுவினர் பயணித்த வாகனத்தின் இலக்கம் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் கவனத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றஉறுப்பினராலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலை காணப்பட்டது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்டும் கைது நடவடிக்கை இடம்பெறாத நிலை காணப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போது, குறித்த சம்பவம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வாகன இலக்கம் தரப்பட்டது.

வவுனியா மூன்று முறிப்பு vavuniya, வவுனியா, வள்வெட்டு, யாழில் ,யாழ்ப்பாணம் கைது ஆவா குழு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வெள்ளை வான், Today Jaffna Tamil Breaking News | வவுனியா , யாழில் , வாள்வெட்டு , தாக்குதல் , குறித்த , வீட்டு , vavunija news , யாழ் , யாழ்ப்பாணம்

அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி செல்வதாகவும் கூறப்பட்டது.நான் உடனடியாக குறித்த இலக்கத்தினை பொலிஸாருக்கு வழங்கி வானை மறித்து அதனுள் உள்ளவர்களை கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கேட்டிருந்தேன்.

எனினும் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கைது நடவடிக்கை இடம்பெறாமையினால் பொலிஸ் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.

புகுந்து , வவுனியா மூன்று முறிப்பு Today Jaffna Tamil Breaking News | வவுனியா , யாழில் , வாள்வெட்டு , தாக்குதல் , குறித்த , வீட்டு , vavunija news , யாழ் , யாழ்ப்பாணம்

இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள் இருவரிற்கு கொரோனா