Home உள்ளூர் செய்திகள் வடமராட்சியில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை

வடமராட்சியில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை

more news

வடமராட்சியில் சுகயீனம் காரணமாக காதலன் உயிர் இழந்ததை தாங்க முடியாத காதலி யுவதி தவறான முடிவெடுத்து தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

முடிவெடுத்து, யுவதி, வடமராட்சியில் , தவறான, காதலன்

வடமராட்சியில் காதலித்து வந்த இளைஞன் காதலன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.

இந்நிலையில் யுவதி இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான தவறான முடிவுகள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணங்களாக என்றுமே அமையக்கூடாது.

இளைஞர்களே! யுவதிகளே ! உங்களிலே யாருக்காவது இவாறான மனக் கஷ்ரம் ஏற்படுமாயின் உங்களுக்கு நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.

உங்களின் நலனில் அக்கறையுள்ள பெற்றோரை, நண்பர்களை நாடுங்கள். இவ்வாறான முடிவுகள் எந்த ஒரு நன்மையையும் சமுதாயத்திற்கு வழக்கப்போவதில்லை.

தவிர்க்க முடியுமா??

தற்கொலை உணர்வுகள் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் நேரம் செலவிடுதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. ஆனால் ஒரு குழுவாக செய்தால் எளிதாக இருக்கும்.

எப்படி குழு ஒருவரை ஒரு கெட்ட பழக்கத்திற்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதே போல் அவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் உதவி செய்ய முடியும். குறிப்பாக கல்லூரிகளில் இதை முயற்சிக்கலாம்.

தற்கொலை என்பது தனிப்பட்ட மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதைத் தடுப்பதற்கான தார்மீகப் பொறுப்புள்ளது.

ஏனெனில் ஒவ்வொருத் தற்கொலைக்கு பின்னும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. அந்தக் கதையில் நிரம்ப கதாபாத்திரங்கள் சமூகக் குற்றவாளிகளாக வலம் வருகிறார்கள்.

READ MORE >>>  காதலியை கடத்த முயன்ற காதலனால் பரபரப்பு!

எடுத்துக்காட்டாக ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்குப் பின்னால் ஒரு காதலனின் நடிப்போ அல்லது பெற்றோர்களின் பாசமற்ற நடவடிக்கையோ கண்டிப்பாக இருக்கிறது.

இந்தக் கதாபாத்திரங்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி கொண்டு தற்கொலை எண்ணம் கொண்டவர்களை பாதுகாக்க வேண்டும்.

குறைந்து வரும் கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தால் நாம் இழந்த அன்பு மற்றும் ஆதரவைக் கொடுப்பது நண்பர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரின் கடமையாகும்.

சமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது.

ஒருசிலக் கல்லூரிகள் உடனடியாக அலை பேசித் தடைச் சட்டத்தை அமல்படுத்திகிறார்கள். முழுமையாகத் தடை செய்வதை விட முதிச்சியான உபயோகத்தை பலப்படுத்துவது முக்கியம். இளைஞர்களே!தவமாய்ப் பெற்ற வாழ்வு உன்னுடையது.

வேண்டுமென்றால் உன் தாயைக் கேட்டுப்பார்.. தற்கொலை செய்து கொள்ளும் ஒருசிலருக்கு நடுவே வாழ்க்கையை வென்றுக் காட்டி வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.

அந்த ஏராளமானோர்களில் ஒருவராகிய நாம் ஏன் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. “தத்தெடுப்போம்; தற்கொலையைத் தடுப்போம்”.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  பாலியல் தொல்லை ! யுவதி தற்கொலை !

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleவவுனியாவில் இரு வீடுகள் மீது வாள்வெட்டு குழு அட்டகாசம்
Next articleதனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று