Home Tamil News மாணவிக்கு கொரோனா: வவுனியா வளாக மாணவர் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது

மாணவிக்கு கொரோனா: வவுனியா வளாக மாணவர் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் மாணவர் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

மாணவிக்கு கொரோனா: வவுனியா வளாக மாணவர் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யில் மருத்துவ பீட மாணவர்கள் , தாதிய மாணவர் கோரோனா வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் சுதுமலை யைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது -  மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள க பல்கலைகழகத்தின் பெண்கள்விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அவர்களிற்கு கட்டம், கட்டமாக பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பொய் உரைத்த சச்சி!! சூலம் அகற்றப்பட்டது உறுதியானது!!