Home Local news குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

நுவரெலியா, இராகலை குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

நுவரெலியா, இராகலைப் பகுதியிலுள்ள குளத்தில் நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

நுவரெலியா, இராகலை குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

இன்று (02.04.2021) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ. அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, இராகலை குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச் சென்றுள்ளனர்.

இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் என்ற சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.

நுவரெலியா, இராகலை குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர்.

தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

தேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும். அதன்பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா, இராகலை குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் டுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இராகலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் CCTV