Home Local news குடும்ப தகராறு ! தொடரும் தற்கொலைகள் ! கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய்

குடும்ப தகராறு ! தொடரும் தற்கொலைகள் ! கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய்

இலங்கையில் குடும்ப தகராறு காரணமாக தினமும் தொடரும் தற்கொலை என மஹியங்கனை பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது,

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை இளம் தாயொருவர் கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மஹியங்கனை, பகுதியில், மீட்கப்பட்ட ,குடும்ப தகராறு , பகுதியில், தற்கொலை , கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய் கிளிநொச்சி மஹியங்கனை

எனினும், பரிதாபமாக குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம், மஹியங்க னை பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

மஹியங்கனை பகுதியில், குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்ட து.

இதனையடுத்து, மன வேதனை அடைந்த தாய் தனது பதினைந்து மாத ஆண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

குறித்த சம்பவத்தைக் நேரில் கண்ட அயலவர்கள் ஓடி சென்று, அந்த கிணற்றில் இருந்து தாயையும் குழந்தையையும் விரைவாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக மஹியங்கனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், மீட்கப்பட்ட கை குழந்தை இறந்துள்ளது.

சம்பவத்தில் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த மாப்பாகடவெவ கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தாய் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் .

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில், பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மஹியங்கனை, பகுதியில், மீட்கப்பட்ட ,குடும்ப தகராறு , பகுதியில், தற்கொலை , கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய் கிளிநொச்சி மஹியங்கனை

இதேவேளை, நேற்றைய தினமும் கிளிநொச்சியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியைக் கொன்று தனது உயிரையும் மாய்துள்ளார் கணவர்.

எனினும் பெற்றோர்களின் விபரீத முடிவால் 3 குழந்தைகள் நிர்கதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

** யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு(Opens in a new browser tab)

READ MORE >>>  பொய் உரைத்த சச்சி!! சூலம் அகற்றப்பட்டது உறுதியானது!!

** பாலியல் தொல்லை ! யுவதி தற்கொலை !(Opens in a new browser tab)

** பெர்னாண்டோ எனும் வெறி நாயால் யுவதி தற்கொலை (Opens in a new browser tab)

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.