Home Local news வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

வரணியில் தொல்பொருள் தமிழரின் அடையாளங்கள் கண்டுபிடிப்பு
யாழ்.வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது

வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி மணிமாறன் தலைமையில் குறித்த எச்சங்கள் மீள்நிர்மானம் செய்யப்பட்டது.

வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமராட்சியில் இருந்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வீதியோரமாக வரணிப் பகுதியில் இந்த தொல்பொருள் எச்சங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அக்காலப்பகுதியில் வீதியால் போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் மற்றும் சுமையை சுமந்து வருபவர்கள்

வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

சுமையை சுமைதாங்கியில் இறக்கி வைத்து களைப்பாறி நீர் அருந்தி விட்டு செல்லும் வகையில் குறித்த குடிநீர் கிணறும், சுமைதாங்கியும் அமைந்துள்ளது.

இது 1960 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாகவும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்திருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இருந்த குறித்த தொல்லியல் எச்சங்கள் தற்போது வீதி அகலிப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு

வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

தொல்லியல் அகழ்வு அதிகாரிகளால் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அளவுகளில் தற்போது மீள்நிர்மானம் செய்யப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு- இங்கு புத்தர் சிலையோ அல்லது பௌத்தம் தொடர்பான தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டில்லியில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு. ஒருவர் பலி.