Home Local news தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலை யின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

இத்திக்குளம் குளத்தில் இரண்டு சிறுவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச்சிறுவனுடன் சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தகவலைக் கூறியதையடுத்து, அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை, தன்னுடைய மகனை முதலை இழுத்துச் செல்வதை அவதானித்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

இதேவேளை, நேற்று முதல் காணாமல் போயிருந்த இச்சிறுவன், முதலை கடித்த நிலையில் கிராம மக்களின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் உயிராபத்துக்களுக்கான மீட்புப் பணிச் செயற்பாடு நடைமுறையில் உள்ளதா?

எதிர்பாராத ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் போது உயிருக்குப் போராடுவோரை துரிதகதியில் மீட்பதற்கான பொறிமுறை மூதூர் கிழக்கில் இல்லாமையின் காரணமாக அநாவசிய உயிரிழப்புக்கள் பதிவாகின்றன.

உயிராபத்துக்கள் ஏற்படும் போது போலீசாரை அழைப்பதனால் அவர்களால் மனித வலுவைத் தவிர வேறு எதனையும் செய்யும் வசதிகள் அவர்களிடமும் காணப்படுவதில்லை.

READ MORE >>>  2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

ஆனாலும் அவர்களால் தமது உயிரைப் பணயம் வைத்தே செயற்பட வேண்டியிருக்கிறது.

இன்றைய இத்திக்குளம் சம்பவம் புகட்டும் பாடமும் இதுவே.

திருகோணமலை சம்பூர் தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியில் தந்தை கண்முன்னே முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

சம்பவம் தொடர்பில் அறிந்ததும் போலீசார் துரிதமாக சம்பவ இடத்தை அடைந்தாலும் முதலையிடமிருந்து சிறுவனை மீட்கும் வசதிகள் எவையும் அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே மாவட்ட மட்டத்தில் இதற்கான துரித ஏற்பாடு செய்யப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்களிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.