Home Health news நரம்பு சுருட்டல் கட்டுப்படுத்துவது எப்படி?

நரம்பு சுருட்டல் கட்டுப்படுத்துவது எப்படி?

more news

நரம்பு சுருட்டல் varicosis veins சிகிச்சை , வீக்கம் , கட்டுப்படுத்துவது எப்படி? அனைவருக்கும் பகிருங்கள்

நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம்.

இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.

know, qualities, medical care, care plans,Health Fitness, health news, medical news,tamil news, post,tab,opens,மருத்துவம்,யாழில்,செய்திகள்,Jaffna7 Breaking News | நரம்பு சுருட்டல் varicosis veins சிகிச்சை , வீக்கம் கட்டுப்படுத்துவது எப்படி? அனைவருக்கும் பகிருங்கள்

பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும்.

பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

10 முதல் 20 சதவீத மக்கள் நரம்பு சுருட்டல் எனும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது.

குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில் நரம்பு சுருட்டல் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.

READ MORE >>>  அடிக்கடி டாஸ்மாக் மூடுறதால,சனியன் புடிச்ச சரக்கை விட நினைக்கிரிங்களா ? -சில வழிகள்

இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள், தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.

காரணங்கள்:

அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை.

ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.

அறிகுறி:

Jaffna7 Breaking News | நரம்பு சுருட்டல் varicosis veins சிகிச்சை , வீக்கம் கட்டுப்படுத்துவது எப்படி? அனைவருக்கும் பகிருங்கள்

இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.

நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும்.

கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்

பிரச்னைகள்:

தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே.

உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும். டிவிடி (deep vein thromposis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும்.

இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.

READ MORE >>>  உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

சிகிச்சை:

நரம்பு சுருட்டல் varicosis veins கட்டுப்படுத்துவது எப்படி? அனைவருக்கும் பகிருங்கள்!

ஆரம்ப நிலையில் நரம்பு சுருட்டல்  கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது.

ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும்,

லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.

ஆயுர்வேத சிகிச்சை:

தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம், புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி,

மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு போன்றவை நல்ல பயன்களை தருகிறது.

ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.

தவிர்ப்பு முறை:

அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும்.

இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம். தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

வீட்டு வைத்தியம்:

வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்.

READ MORE >>>  சிறுநீரக நோயாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும்.

வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமேஷம் முதல் மீனம் வரை12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்
Next articleஉயிரின் மதிப்பு இவ்வளவு தானா