Home Accident News ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் விபத்து

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் விபத்து

ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபரணையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த வேன் வாகனமொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் விபத்து

விபத்தில் 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வேன் வாகனத்தின சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொரொன்துடுவ ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதான விதியின் தெல்துவ பிரதேசத்தில் களுத்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி

பயணித்த பேருந்தொன்றில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வாத்துவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கணவனை இழந்த பெண் மற்றும்13 வயது சிறுவனிற்கும் நேர்ந்த பரிதாபம்