Home Local news யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரோனா தொற்றிற்கு இலக்கான சம்பவம் நேரடியாக தொடர்பு கொண்டோர் அவதானம்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளான சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரோனா தொற்றிற்கு இலக்கான சம்பவம் நேரடியாக தொடர்பு கொண்டோர் அவதானம்

அவரிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, முதல்வர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோரை அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது

இந்நிகழ்வில் முதல்வரும் கலந்து கொண்ட நிலையில் இன்றைய தினம் முதல்வர் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.

அதேவேளை 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோர், தம்மை தனிப்படுத்தி கொள்ளுமாறும் முதல்வர் கோரியுள்ளார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை - வெளியானது வர்த்தமானி!
Previous articleஇன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் . பழைய கடன்கள் வசூலாகும்
Next articleவடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா ! திருநெல்வேலி பொது சந்தை மூடல்