Home Accident News வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம்

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம்

பேருந்து கோர விபத்தின் போது காப்பாற்ற மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் ! வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு

பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியரின்  நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார்.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக வைத்தியரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.

நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன்.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.

பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

250 – 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.

25 – 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன. காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார்.

READ MORE >>>  பசறை விபத்து – தந்தையை இழந்து தவிக்கும் மற்றுமொரு குடும்பத்தின் சோகக் கதை

400 – 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர். கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம்.

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம் கோர விபத்து! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள் மனிதாபிமானம் வைத்தியர் பேருந்து காப்பாற்ற

காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.

நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் மனிதாபிமானம் இல்லாமல் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.

இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவல்லவா மனிதாபிமானம்.

இதேவேளை, விபத்திற்குள்ளான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.

அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வானை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.

இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.

இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.

READ MORE >>>  சகோதர சிறுவர்களை மோதிதள்ளிய வடி! ஒருவர் பலி

வைத்தியரின் பதிவு ! வெளிப்படுத்திய மனிதாபிமானம்

நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.

அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.

அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து நேற்றைய தினம் பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து ! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள்

கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் CCTV

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.