Home Accident News விபத்து ! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள்

விபத்து ! தப்பிய சாரதி! வெளியான தகவல்கள்

விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள்

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த பேருந்தினை செலுத்தி சென்ற சாரதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

விபத்தில் சாரதி உயிரிழந்து விட்டதாக இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாரதி ஆசனத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து காணப்பபட்டார். எனினும் அந்த நபர் சாரதி இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

பேருந்து சாரதி லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பசறை மற்றும் லுணுகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகர்களினால் தொழில்நுட்ப பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளனர். எனினும் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் பரிசோதனை மேற்கொள்வதறகு சில காலமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோர விபத்து ! தப்பிய சாரதி ! வெளியான தகவல்கள் அந்த பஸ் விபத்தில்

இதேவேளை, பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

READ MORE >>>  பேருந்து கவிழ்ந்ததில் 18 பயணிகள் காயம்

உயிரிழந்தவர்களில் ஒருவர் அடையாளம் காண முடியாதளவிற்கு சிதைந்துள்ளார். உயிரிழந்த 15 பேரில் 6 பேர் பெண்கள் எனவும் தெரியவருகின்றது.

இன்று (20) காலை 6.55 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த பகுதியில் கருங்கல் பாறையொன்று உருண்டு வீதியில் விழுந்துள்ளது. இதனால் வீதியின் ஒரு பகுதியால் போக்குவரத்து செய்ய முடியாமல், இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.

சுமார் 6 மாதங்களின் முன்னர் கருங்கல் பாறை உருண்டு விழுந்துள்ளது. எனினும், அதை தொடர்புடைய நிறுவனங்கள் எதுவும் அகற்ற நடவடிக்கையெடுக்கவில்லையென பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அந்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று அந்த குறுகிய பாதைக்குள் வளைவு கோட்டை தாண்டி நுழைய, பேருந்தும் சடுதியாக அந்த பகுதிக்குள் நுழைய முயன்று, விபத்தை தவிர்க்க இடதுபக்கமாக- பள்ளப் பக்கமாக திருப்பினார்.

பேருந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை 200 அடி பள்ளத்திலிருந்து மீட்க 3 மணித்தியாலங்கள் வரை சென்றுள்ளது. மீட்பு பணியாளர் ஒருவர் மீது கல் விழுந்ததில் அவரும் காயமடைந்துள்ளார்.

கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் CCTV

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.