Home Local news யாழ் . மேலும் பரவலாக 9 பேருக்கு கொரோனா

யாழ் . மேலும் பரவலாக 9 பேருக்கு கொரோனா

யாழ் ல் 9 பேருக்கு கொரோனா தொற்று  இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளும் உள்பட யாழில் 6 கோவிட் -19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழில் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிய ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் கண்டறிய ப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், யாழில் மாநகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் கோவிட் -19 நோய்த் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

READ MORE >>>  சகோதர சிறுவர்களை மோதிதள்ளிய வடி! ஒருவர் பலி

யாழில் கொரோனா தொற்று உள்ளமை யாழ்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மரக்கறி சந்தையில் சிலரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை யில் பெண் வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்தனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.