Home Lifestyle பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்! பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்! என்னடா வாழ்க்கை இது பாவம் ஒருநாளும் அழுதிருக்க மாட்டார்!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

மனைவியை நெஞ்சில் சுமந்து! பிள்ளைகளை தோளில் சுமந்து! குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து! போகும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போதும்!

தான் கலங்கினால் குடும்பம் உடைந்து விடும் என பாவம் கல்லாய் நின்றவர்! நாம் அவரை கல்லெனவே நினைத்து விட்டோம்!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்! அப்பாவிடம் எட்டி நிற்போம்! முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்!

ஆனால் தோல்வியில் துவளும் போது பிடித்து கொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்! தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும் ஜீவன் அது!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

நாம் திண்ணும் சோறும்! உடுத்தும் உடையும்! படித்த படிப்பும் அப்பாவின் வேர்வையில்தான் என ஒருநாளும் அவர் சொல்லிக் காட்டிதில்லை! பாவம் நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!

ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்! அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம் அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!

பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!!

நமக்கு மீசை முளைத்தால் அவர் குதூகளிப்பார்! தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்! நம் வாழ்க்கையின் பின்னால் அப்பா எப்போதுமே இருப்பார்!

அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த, கொஞ்ச தெரியாது!  போலியாய் இருக்க , தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது! தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள பாவம் அந்த பைத்தியத்திற்கு அழவும் தெரியாது!

READ MORE >>>  கணவனை காதலிக்கும் மனைவிமார்கள்

வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!

முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! பாவம் அவர் அழுதவரில்லை! நம் சந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!

பாசமோ! மன்னிப்போ! அழுகையோ! உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்! ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா மரணமோ!
உங்கள் அப்பா வயதுடைய யாரோ ஒருவரின் மரணமோ!

உங்களை புரட்டி போட்டு! அவர் பாசம் புரிந்து! அப்பாவை தேடி ஓடிரும்போது! வீட்டில் அப்பா சிரித்துக் கொண்டிருக்கலாம் புகைப்படத்தில்!! பாவம் அவருக்குதான் அழத்தெரியாதே!

அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது

உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. ‘தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர்.

நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய்.

நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.

READ MORE >>>  தயவு செய்து அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய உண்மை பதிவு

என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாட வேண்டும்.

தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்துகொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு.

அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார்.

எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.

உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன.

ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம்.

இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான்.

READ MORE >>>  இரண்டு காதலர்கள்!! நேரில் அழைத்து பரீட்சை வைத்து திருமணம் முடித்த யாழ் யுவதி!

உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleநீயின்றி நானில்லை ஏன் தெரியுமா
Next articleகணவனை காதலிக்கும் மனைவிமார்கள்