Home Lifestyle இன்னையோட அவ விட்டு போய் ஒரு வருசம்

இன்னையோட அவ விட்டு போய் ஒரு வருசம்

இந்த ஒரு வருசத்துல ஏதாவது மாறும்னு நினைச்சேன் எதுவும் மாறல ஆனா நான் மாற முயற்சி பண்னும் வரைக்கும் எதுவும் மாறாதுனு மட்டும் புரிஞ்சுது.

எப்பயும் சொல்ரது தான் நான் அவ ள லவ் பண்ண அளவ விட அவ என்ன லவ் பண்ண அளவு எதுக்குமே ஒப்பிட முடியாது.

லவ் பண்ணும் போது எனக்காக தன்னையே தியாகம் பண்ண ஒருத்தி.! தனக்கு புடிக்காட்டியும் எனக்கு புடிக்கும் என்ற ஒரே ரிசன் க்காக அத ரிஸ்க் எடுத்து பன்ற ஒருத்திய லைப்ல மிஸ் பன்றது

எவளவு பெரிய துரதிர்ஷ்டமும் வலியும்.அப்படிப்பட்ட ஒருத்திய என லைப்ல குடுத்த ஆண்டவன் நிரந்தரமா குடுக்க விரும்பல. இப்பிடி பட்ட ஒருத்தி எங்க யார்கூட இருந்தாலும் நல்ல இருக்கனும் தான் நான் நினைப்பன்.

என் மேல அவ  காட்டின அந்த அன்பும் அரவணைப்பும் கூட இருக்கும் போது என்ன பார்த்துகொள்ர விதமும் ஒரு தாய்க்கு நிகரா இருக்கும்.

அவ ள பொறுத்த வரைக்கும் அவளுக்கு நான் ஒரு குழந்தை தான் எனக்கும் அவ அப்பிடி தான். அவ எது பண்ணாலும் தப்பு பண்ணாலும் அத ரசிக்க மறந்தது இல்ல..!!

என்ன ஏமாத்திட்டு அவ போய்டா என்றதுக்காக அவ என் மேல வச்ச அன்பு ஒரு நாளும் பொய்யாகாது.

இதுவரைக்கும் அவள பத்தி யார்கிட்டயும் தப்பா ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது.

எல்லம் அவ காட்டின அந்த அன்புக்கும் கரிசனைக்காவும் தான் காலம் பூரா அதுக்கு நான் அடிமையா இருந்தாலும் தப்பு இல்ல நீங்க நினைச்சு கூட பாக்க முடியாத அளவு இருக்கும் அவளோட காதல்.

READ MORE >>>  காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்; பக்கா ஸ்கெட்ச் போட்டு அக்கா தங்கை செய்த செயல்!..

கடந்து போறது தானே வாழ்க்கனு நீங்க சொல்லலாம் ஆனா அத கடக்குரது எவளவு கஷ்டம்னு அந்த இடத்த இருந்தவனுக்கும் இருக்குரவனுக்கும் தான் தெரியும்.

ஆனாலும் கடந்து தான் ஆகனும் இல்லன்னா அதே இடத்துல வாழ்க்கைய முடிச்சுக்கணும்.

காதலிக்கும் போது உங்க காதலியையோ காதலனையோ Control பண்ணி வச்சு இருக்க நினைக்காதிங்க ஒவ்வொரு தனிப்பட்ட மனுஷனுக்கு தனிப்பட்ட சுதந்திரம் னு ஒண்டு இருக்கும்

அது கிடைக்காம போகும் போது தான் தேவையில்லாத முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் உருவாகும் பிற்காலத்துல அதுவே பிரியிரதுக்கு வழி வகுக்கும்.

உங்களுக்கு புடிச்சத நீங்க செய்யுங்க அவங்களுக்கு பிடிச்சத அவங்க செய்யட்டும்.

இல்ல நீ இத தான் பண்ணனும் oder போடாதிங்க. ஒரு சில பசங்களுக்கு தன்னோட காதலி சின்ன சின்ன விஷயங்கள்ள தன்ன கட்டுப்படுத்தி வச்சு இருக்குரதும் அதட்டுரதும் ரொம்பவே புடிக்கும் அத பசங்க அவளவு ரசிப்பாங்க.

(..நான் அப்பிடி தான் அவ கிட்ட திட்டு வாங்கனும்னே தப்பு பண்ணுவேன் அவ என்ன திட்டுர விதம்..!!

அது அவ ளவு குழந்தைதனமா இருக்கும். உச்ச கட்ட சண்டைல கூட எப்பயுமே அத ரசிக்க மறந்தது இல்ல..)

ஆனா அதுவே நீங்க பசங்களோட தனிப்பட்ட சுதந்திரத்துல ஓவரா அதிகாரம் பண்ணா அது நீங்களே ரிகர் பண்ற மாதிரி ஆகும்.

Friends கூட சுத்தாத அங்க இங்க போகாத னு சின்ன சின்ன விஷயங்கள்ளயும் கண்ரோல் பண்ண நினைச்சா தலையிடி உங்களுக்கு தான்.

READ MORE >>>  பேஸ்புக் காதல்! பொலிஸ் அதிகாரியால் இளம் பெண் த.ற்.கொ.லை

அதே மாதிரி நீ இப்பிடி இருந்தா தான் நான் ரசிப்பேன் என்றத விட நீ எப்பிடி இருந்தாலும் நீ என்ன செய்தாலும் நான் ரசிப்பேன் என்றது தான் எதிர்பார்ப்பே இல்லாத காதல்..

முடிஞ்ச வரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்குடுத்து போங்க உண்மையா நேர்மையா ஒளிவுமறைவில்லாம இருங்க.. !

லவ்வுல சின்ன சின்ன சண்டை Ego லாம் இருக்கனும் இல்லனா அது லவ்வே இல்ல..!!

இதெல்லாம் ஏன் சொல்ரன்னா ஒருத்தங்க நம்ம கூட இருக்கும் போது இப்பிடி இருக்க நாம ஜோசிக்க மாட்டோம் அதுக்கு Ego விடாது.

அதுவே அவ ங்க நம்ம வாழ்க்கையில இல்லனு ஆனதுக்கு அப்புறம் நாம மாற நினைச்சும் ஒரு பயனும் இல்ல ஏன்னா காலம் அவங்கள நம்மவிட்டு நிரந்தரமா ரொம்ப தூரம் கூட்டிட்டு போய்டும்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.