Home Accident News ஆடைத் தொழிற்சாலை பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

ஆடைத் தொழிற்சாலை பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

நிகவெவவிலிருந்து கலென்பிந்துனுவெவ நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று காலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் 40 வயதான பெண் ஒருவர் என கலென்பிந்துனுவெவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நோயாளர் காவுவண்டி மூலம் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மிகிந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் இப்பெண்ணின் தலை சரீரத்திலிருந்து வேறாகியிருந்ததாக எமது ஜப்னா 7 செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வாகனத்தின் வெளியே தலையை நீட்டி வைத்திருந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த வேனின் ஓட்டுநரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிங்களத்திற்கு முதலிடம்!! யாழில் திறக்கப்பட்டது பேருந்து நிலையம்