Home Local news தலையில்லா பெண்ணின் சடலம் – தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்

தலையில்லா பெண்ணின் சடலம் – தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்

more news

கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது.

இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது.

இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.

இதேவேளை, கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணிக் தலையை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட காலப்பகுதியிலேயே இந்த பெண்ணை சந்தித்துள்ளார்.

ஹேஷா வித்தானவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்படுவதற்கு முன்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பனர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

சார்ஜன்ட்டாக இருந்த அவர் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சந்தேக நபர் பாதுகாப்பு பிரிவில் இருந்து விலகி புத்தள பொலிஸ் பிரிவிற்கு மாற்றம் பெற்று சென்றுள்ளார்.

READ MORE >>>  இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு தயாராக 24 மோட்டார் சைக்கிளுடன் 40 பேர் கைது

இந்த பெண்ணுடனான தொடர்பு தொடர்பில் சந்தேக நபரின் மனைவி அறிந்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

பிள்ளைகள் மற்றும் மனைவியை கைவிட்டு தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு 30 வயதுடைய காதலி தொடர்ந்து இந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளமையினால் இருவருக்கும் இடையில் பல முறை சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபரும் அந்த பெண்ணும் ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு சென்றிருந்த போது இந்த திருமணம் தொடர்பில் சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு அறையையும் சுத்தம் செய்துள்ளாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது

அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்த பின்னர் உடலில் இருந்து தலையை வெட்டி எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை விடுதியிலேயே வைத்து சென்ற அதிகாரி பின்னர் ஹங்வெல்ல நகரத்திற்கு சென்று பை ஒன்றும், கழுத்தை வெட்டுவதற்கு கத்தி ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.

பெண்ணை கொலை செய்த பின்னர் இரத்த கறைகளை கழுவி சுத்தம் செய்வதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனினும் அறையில் இருந்து இரத்த கறைகளும் பெண்ணின் தலைமுடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கொழும்பிற்கு வரும் போது அவரது தோல்பட்டையிலும் பெரிய பை ஒன்று காணப்பட்டது. அதில் அந்த பெண்ணின் தலை இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அந்த நபர் தனது வீட்டை நோக்கி செல்லும் போது தலையை ஏதாவது ஒரு இடத்தில் வீசவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

READ MORE >>>  யாழ் பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா தொற்று

மேலும் அவர் படல்கும்புர நகரத்திற்கு சென்று கடைகள் பலவற்றில் விஷகுப்பிகள் கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார். விஷ குப்பிகள் கொள்வனவு செய்தவர்கள் தனது பிள்ளைகளுக்கு ஐஸ்கீரிமும் கொள்வனவு செய்துள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு சென்றவர் வீட்டில் வைத்து இறுதி கடிதத்தை எழுதியுள்ளார்.

விடுதியில் உப பொலிஸ் அதிகாரி மற்றும் காதலி தங்கள் தகவல்களை வழங்கியிருந்த நிலையில் அதன் மூலம் பொலிஸார் அவரை வீட்டை கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிடும் போது அவர் மிகவும் நுட்பமான முறையில் காட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

அங்கு கடந்த 2ஆம் திகதி இரவு சந்தேக நபர் விஷம் அருந்திவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்:-

பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளியின் சடலம் மீட்கப்பட்டது!!

பேஸ்புக் தொடர்பு!! மன்னிப்பு கேட்ட கொலையாளி!! கழுத்தை அறுத்தது எப்படி!!

கள்ள காதலியை வெட்டி கொன்ற பொலிசார் தற்கொலை!?

சூட்கேஸிஸ் பெண்ணின் சடலம்!! கொலையாளி அடையாளம்

சூட்கேஸில் வைத்து பயணிகள் பேருந்தில் கொண்டு வரப்பட்ட யுவதியின் முண்டம்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மகள் – எதுவும் உணராது விரைவில் வருவார் என காத்திருக்கும் தாய்

 

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  பலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்படுகிறது; தேரர் முறைப்பாடு.

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous article50திலும் ஆசைவரும்!! பெண்ணை கொலை செய்த பொலிஸ் அதிகாரி மனைவிக்கு எழுதிய கடிதம்
Next articleதெல்லிப்பளை வைத்தியசாலையில் பிறந்தநாள் நிகழ்வு