Home Cinema AK61 படத்தில் இணைந்த பழமை வாய்த்த வில்லன் நடிகர் !! வைரலாகும் தகவல் இதோ !

AK61 படத்தில் இணைந்த பழமை வாய்த்த வில்லன் நடிகர் !! வைரலாகும் தகவல் இதோ !

வெர்சட்டைல் ஆக்டர் என மிகச் சிலரையே நாம் குறிப்பிடுவோம். அதுவும் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மிக சிறப்பாக பங்கெடுத்து வரும் நடிகர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர்தான் பிரகாஷ் ராஜ். ஆம். இவர்தான் இப்போது விஜய் மற்றும் அஜித் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

அஜித் நடிக்கும் ஏகே61 படத்திலும், விஜய் நடிப்பில் தளபதி 66 படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். இதுவரையில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். கிட்டத்தட்ட எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார். இந்நிலையில்தான் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, பிரகாஷ்ராஜ் இரண்டு பெரிய கதாநாயகர்களின் படத்தில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடிக்கும் படம் ஏகே61. இதுவரையில் பெயரிடப்படாத இந்த படத்தில் அஜித்துடன் இன்னும் சில நடிகர்கள் நடிக்கவுள்ளனர். ஒரு ஹெய்ஸ்ட் மாதிரியான கதைக்களம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்திலும் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன்பு தம்பி ராமையா இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்திருந்தார். விஜய் நடித்த ஜில்லா படத்திலும், அஜித் நடித்த வீரம் படத்திலும் நடித்திருந்தார் தம்பி ராமையா. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின. இந்நிலையில், விஜய் படமும், அஜித் படமும் மீண்டும் நேருக்கு நேர் மோதுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

READ MORE >>>  ஆஹா தமிழுடன் இணையும் சிம்பு மற்றும் அனிருத்? வைரலாகும் தகவல் இதோ !
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்
Previous articleவிஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Next articleசமந்தா-நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்