போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
பைக் ரேஸ், நகை கொள்ளை, போதை மருந்து பழக்கம் உள்ளிட்டவைகள் கொண்ட கதைக்களமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், போனி கபூர், எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் AK61 உருவாகவுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வங்கி கொள்ளை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியானது.
அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இரட்டை கதாநாயகிகள் என்றும், ஒன்று தபு மற்றொன்று ரகுல் பீர்த்தி சிங் என சொல்லப்படுகிறது.
இப்படத்திற்காக அஜித் புதிய லுக்கிற்காக, தனது உடல் எடையில் 25 கிலோ குறையவுள்ளார் எனவும் ஸ்டைலான அஜித்தை இதில் பார்க்கப்போகிறோம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.