பொதுவாக தமிழசினிமாவில் பாக்ஸ் ஆபீஸில் கிங் என்றால் அஜித்தும் ஒருவர் .அவர் தற்போது நடித்த நடிகர் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது.இதனை தொடர்ந்து வலிமை திரைப்படம் தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.அடுத்த படமான அஜித் 61 படத்தில் யுவன் தான் இசையமைப்பாளர் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ..ஆனால் ஒரு சிலரோ சிம்ப்ராண் என்றும் கூறி வருகின்றனர்
விஜய்யின் பீஸ்ட் ரிலீஸாவதற்கு முன்பாகவே அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விஜய்யின் 66ஆவது படமான இப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் சரத்குமாரும் இணைந்துள்ளனர். விஜய் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதையடுத்து பலரது கவனமும் தற்போது அஜித் -61 பக்கம் திரும்பியுள்ளது.
வலிமை படம் ரிலீஸாகி 2 மாதம் ஆகியுள்ள நிலையில் அஜித்-61 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போல செட் போடப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்துக்காக அஜித் கடுமையாக உடல் எடையைக் குறைக்கவுள்ளதும் முற்றிலும் ஸ்டைலிஸான தோற்றத்தில் அவர் இதில் நடிக்கவுள்ளதும் பலரும் அறிந்ததே.
அதேபோல அஜித் இப்படத்தில் வில்லத்தனமான புரொஃபசர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் 61 கதையைப் பொறுத்தவரை, இயக்குநர் ஹெச்.வினோத் அஜித்துக்கு முதன்முதலாக சொன்ன கதை இதுதானாம். ஆனால் அதை எடுக்காமல்தான் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் எடுக்கப்பட்டதாம்.
இரு படங்களும் முடிக்கப்பட்ட நிலையில்தான் தற்போது அந்தக் கதையை படமாக்கவுள்ளார்களாம். வலிமையைப் போல அல்லாமல் இப்படத்தை சீக்கிரமே முடித்துக்கொண்டு அடுத்த படத்துக்குத் திரும்பவுள்ளார் அஜித். அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.