தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றது.
பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அத்தோடு , இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அத்தோடு , இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.எனவே action படங்களில் இனி டூயட் பாடினாலோ லவ் சீன்லாம் வைத்தாலோ செட் ஆகாது என்பதை உணர்ந்து விட்டாராம் அஜித் .
எனவே இந்த படத்தில் அந்த மாதிரியான எந்த போரடிக்கும் விஷயங்களும் இருக்க கூடாது என்று இயக்குநரிடம் கண்டிஷன் போட்டு விட்டாராம். நடிகரின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இயக்குநரும் ஹீரோயினுக்கான போர்ஷனை வெகுவாகக் குறைத்து விட்டாராம்.அதுமட்டும் இன்றி புகைபிடிக்கும் காட்சிகளும் அறவே வேண்டாம் என்று கூறினாராம் அஜித் இந்த செய்தி தற்போது வைரலாகிவருகிறது .