நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் இருக்கும் சமீபத்தைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தற்காலிகமாக ‘அஜித் 61’ என அழைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பேட்டியில் தெரிவித்துவிட்டார்.
அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜித் 61 படம் ஒரு வங்கி சம்மந்தமான பிரச்சனையை மையமாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரக்கனி மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் சாரபட்டா புகழ் ஜான் கொக்கன் உள்ளிட்டவர்களும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான AK 61 பட தகவலை பகிர்ந்து உள்ளார். அதில் ” 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும்” என கூறியுள்ளார். மேலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் கூறி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களோடு இருக்கும் இந்த புகைப்படத்தில் அஜித் நீண்ட தாடியோடு “AK 61” பட கெட்டப்பில் இருக்கிறார். காதில் ஸ்டட்டுடன் வெள்ளை நிற ஆடையில், கூலிங் கிளாஸூடன் அஜித் இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.