அஜித் நடிக்கவிருக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியான.
இந்த படத்தில் நாயகியாக தபு நடிப்பார் என்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இருவருமே நடிக்கவில்லை என்பதை படக்குழுவினர் சமீபத்தில் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரகுல் பிரீதி சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எச் வினோத் இயக்கிய ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து இருந்த நிலையில் மீண்டும் தனது முந்தைய படத்தில் நடித்த நடிகையை ‘அஜித் 61’ படத்திற்காக புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த படத்தின் ஒரு கிளாமர் நாயகியாக ராய்லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அவரும் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் 61 படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களில் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.