சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய வினோத் அஜித்தை வைத்து இயக்குகிறார் என்றவுடன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும், ரீ மேக் படம் என்பதால் பொறுத்துக்கொண்டனர்.
ஆனால், அதன் பிறகு மீண்டும் இயக்குனர் வினோத் – அஜித்குமார் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்தது. ஆனால் அந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருந்தது. இந்த படம் வினோத் பாடம் போல இல்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.
வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒன் லைன் எனவும் கூறப்படுகிறது.அதனால், இந்த படத்திற்கு வினோத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இப்படம் வங்கி சமபந்தப்பட்ட கதைக்களம் என கூறப்படுகிறது. மேலும், இதில் அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால், அஜித் ரசிகர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.
அஜித்திற்கு வில்லன் லுக்கில் சிரிப்பது போன்ற காட்சி மங்காத்தா இடைவேளை , வேதாளம் தெறிக்கவிடலாமா சீன், சிட்டிசன் படத்தில் முதல் சண்டைக்காட்சியின் போது வரும் வில்லத்தனாமா சிரிப்பு கடந்த சில படங்களாக ரெம்ப நல்லவராக அஜித் நடித்ததால் இல்லாமல் போனது. அதனை திரும்ப கொண்டு வாருங்கள் வினோத் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.