Home வவுனியா செய்திகள் A9 வீதியில் கோர விபத்து; சிறுமி பலி

A9 வீதியில் கோர விபத்து; சிறுமி பலி

ஏ9 – வீதி பூனாவ பகுதியில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ9 – வீதி பூனாவ பகுதியில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்காக நாய் சென்றுள்ளது.

இதன்போது ஏற்படவிருந்த விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாரதி வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து குறித்து பூனாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 19/02/2023, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleசிறுவர்களின் சடலங்கள் மீட்பு ; தாய் கைது