9 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

கஹவத்தை வட்டபொத வீதியில் தனியார் பேருந்து ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் காயமுற்ற மூவர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டபொத தோட்டத்திலுள்ள வட்டபொத தோட்டத்தில் பாதை 498 இல் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (06) காலை 9.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வட்டபொத தோட்டத்தின் பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

9 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

அப்போது பேருந்தில் 09 பயணிகளே பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றுமொருவர் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

9 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறு காயங்களுக்கு உள்ளான பலர் சிகிச்சை பெற்று கஹவத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..